மக்கள் பிரச்சனைகளில் திமுகவுடன் இணைந்து செயல்பட தயார் என்றும்  எந்த நேரத்திலும் ஏதும் நிகழலாம் என்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலனின் தயார் நேசம்மாள் படத் திறப்பு விழா சென்னையில் உள்ள பெரியார் திடலில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், மாற்றம் வேண்டும் என்று கோரும் திருமாவளவன் தனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மக்கள் பிரச்சனைகளில் திமுகவுடன் இணைந்து செயல்பட தயார் என்றும்  எந்த நேரத்திலும் ஏதும் நிகழலாம் என்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகள் பிரச்சனைகளில் கூட போராடவிடாமல் தமிழக காவல்துறை தடுக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.