Asianet News TamilAsianet News Tamil

தமிழர்களுக்கு நல்லது செய்த அமித்ஷா... லாஜிக்கை சொன்ன பழ.நெடுமாறன்..!!

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் விரும்பும்போது இலங்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியும்.  

tamil desiya munnani leader paza. nedumaran sport bjp citizenship bill and lankan tamil citizenship issue
Author
Chennai, First Published Dec 11, 2019, 4:23 PM IST

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்  குடியுரிமை வழங்கவேண்டும் என  தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பழ.நெடுமாறன்,  இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கவேண்டும் என சில தலைவர்கள் இந்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். ஈழத் தமிழர்  அகதிகளின் வாழ்வில் இதன் மூலம் மறுமலர்ச்சி ஏற்படும் எனக் கருதி அவர்கள் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

tamil desiya munnani leader paza. nedumaran sport bjp citizenship bill and lankan tamil citizenship issue

 ஈழத் தமிழர்கள் இந்தியக் குடியுரிமைப் பெற்றப் பிறகு அவர்களை சிங்கள அரசு மீண்டும் இலங்கைத் திரும்ப ஒருபோதும் அனுமதிக்காது. ஈழத் தமிழர்களை இலங்கையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் என்பதே சிங்கள அரசின் திட்டமாகும்.  அதற்கு நாம் ஒருபோதும் துணைப் போகக் கூடாது.ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் விரும்பும்போது இலங்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியும்.  ஆனால், அவ்வாறு வழங்குவதற்கு இலங்கை அரசு ஒத்துக்கொள்ளவேண்டும். tamil desiya munnani leader paza. nedumaran sport bjp citizenship bill and lankan tamil citizenship issue

எனவே, இந்தியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்கள் இங்கு வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும், தொழில், வணிகம் செய்வதற்கும், அவர்களுடைய குழந்தைகள் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கும், தேவையானவற்றை இந்திய – தமிழக அரசுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் என நான் வேண்டிக்கொள்கிறேன். என நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios