Asianet News TamilAsianet News Tamil

பாட்டிலுக்கு 10 ரூபாயா எடுக்குறீங்க..? டாஸ்மாக் ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி... செம உத்தரவு..!

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

Take 10 rupees per bottle ..? Tasmac employees to be arrested
Author
Tamil Nadu, First Published Jul 21, 2021, 12:23 PM IST

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் எச்சரித்துள்ளது. Take 10 rupees per bottle ..? Tasmac employees to be arrested

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்ரமணியல், மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்தார். அப்போது கிடங்கிலும், டாஸ்மாக் கடைகளிலும் 90 நாட்களுக்கு மேல் மதுவகைகளை இருப்பு வைக்கக்கூடாது. குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து வகை மதுபானங்களையும் விற்பனை செய்ய வேண்டும். மதுவகைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். Take 10 rupees per bottle ..? Tasmac employees to be arrested

மதுபானக் கடைகளை மாவட்ட மேலாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கடைகளை திறப்பதற்கு முன்பு மேலாளர்கள் உட்பட ஊழியர்கள் யார் யார் டாஸ்மாக் கடைகளில் உள்ளனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூல  அனுப்ப வேண்டும். கடைக்கு பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண்மை இயக்குநர் அனுமதி இன்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்கக்கூடாது. மதுபான கடைகளில் வெளிநபர் உள்ளே நுழையக்கூடாது’’ என அவர் உத்தரவிட்டுள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios