Asianet News Tamil

தப்லீக் ஜமாத்தாரை வீட்டை விட்டே வெளியேற அனுமதிக்கக்கூடாது... வரிந்து கட்டும் பிரபல நடிகையின் சகோதரி..?

அவர்கள் புழுக்களை விட மோசமானவர்கள். அவர்களுக்கு உதவ வரும் காவல்துறையினர், மருத்துவர்கள் மீது உமிழ்வார்கள். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும்.

Tablick Jamaat members are worse than worms ... sister of a famous actress
Author
India, First Published Jun 5, 2020, 12:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 2200 பேர் அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி அவர்களைத் தடுக்க வேண்டும். அவர்கள் புழுக்களை விட மோசமானவர்கள்’என பிரபல நடிகை கங்கனா ரணவத்தின் சகோதரி விமர்சித்துள்ளதாக ட்விட்டரில் பதியபட்டுள்ளது.

 

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்தும் பெரும்பாலோனோர் பங்கெடுத்துக்கொண்டது தொற்று பரவலுக்கு மிக முக்கியக் காரணமாக கருதப்பட்டது. இந்த நிலையில் இதன் தலைவரான மௌலானா சாத் மீது பண மோசடி வழக்கினை அமலாக்க இயக்குநரகம் பதிந்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக் ஜமாத் கூட்டத்தினை கூட்டியதற்காகக் காவல் துறையினர் இவர் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.இந்த நிலையில் இதன் தலைவரான மௌலானா சாத் மீது பண மோசடி வழக்கினை அமலாக்க இயக்குநரகம் பதிந்துள்ளது.

இந்நிலையில் மவுலானா சாத் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவிலிருந்து சிபிஐ கேட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் சிபிஐ கோரியுள்ளது.முன்னதாக, அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மற்றும் ஐ-டி துறைகளும் மார்கஸ் வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு சேகரித்த தகவல்களை கேட்டு பெற்றன.பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்க இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன, இது சாத் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த மாத தொடக்கத்தில், டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் நிதி தொடர்பான பல ஆவணங்களை சேகரித்ததுடன், ஜமாத் தலைவர் மவுலானா சாதின் ஐந்து நெருங்கிய நண்பர்களின் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்தது.மே 16 ந்தேதி மவுலான சாதின் நெருங்கிய உதவியாளரான முர்சலீனை அமலாக்கதுறை விசாரித்தது, வரும் நாட்களில், சிபிஐ மவுலானா சாத் மற்றும் மார்கஸ் டிரஸ்ட் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற பலரும் விசா விதிமுறையை மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்று தங்கியதாக மாநில அரசுகள் புகார் தெரிவித்தன. இதனால் அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினரில் 2,550 பேரை கருப்பு பட்டியலில் சேர்த்து, அவர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய தடைவிதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், மாநாட்டில் கலந்துகொண்ட 541 வெளிநாட்டினர் மீதும் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில், மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிந்துரையை பல்வேறு துறைகளுடன் ஆலோசித்த பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இறுதி முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கங்கணா ரணாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டெல் கட்டுப்படுத்தும் பக்கம் என்று புதிதாக ஒரு ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதில் தப்லீக் ஜமாத் பற்றி கடுமையாகச் சாடி கருத்துப் பகிரப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மத ரீதியாக சர்ச்சைக் கருத்துகள் தெரிவித்ததற்காக ரங்கோலி சாண்டெலின் கணக்கை ட்விட்டர் தரப்பு முடக்கியது. தற்போது ரங்கோலி சாண்டெல் பெயரில் @KillBillBride என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர் ரங்கோலி சாண்டெல், நடிகை கங்கணா ரணாவத்தின் மேலாளர், செய்தித் தொடர்பாளர் என்று அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ரங்கோலியின் புகைப்படமே ப்ரொஃபைல் படமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கிலிருந்து வியாழக்கிழமை தப்லீக் ஜமாத் தரப்பைக் கடுமையாகச் சாடி கருத்து வெளியிடப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 960 பேர் அடுத்த 10 வருடங்கள் இந்தியாவுக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் பகிர்ந்து, "ஏன் இந்தியா மட்டும். தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி அவர்களைத் தடுக்க வேண்டும்.

 

அவர்கள் புழுக்களை விட மோசமானவர்கள். அவர்களுக்கு உதவ வரும் காவல்துறையினர், மருத்துவர்கள் மீது உமிழ்வார்கள். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கும். அவர்களை உடனடியாக வெளியே தூக்கி வீசுங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios