t nagar shoppers to join the dmk strike

சென்னையின் மிக முக்கியம் பஜார்களில் ஒன்றான தி நகர் இன்று வெறிச்சோடியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில் திமுகவின் தலைமையில் அனைத்துக்கட்சி அமைப்பும் இன்று கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தி நகர் வணிகர்கள் பலரும் இதை ஆதரித்து கடைகளை அடைத்துள்ளனர். கோடை கால விடுமுறை என்பதால் மக்கள் அதிகமாக வரும் நாளென்றாலும் பலரும் இந்த துப்பாக்கி சூட்டை எதிர்த்து போராடும் விதமாக கடைகளை அடைத்துள்ளனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்க கூடாதென தலைமைசெயலர் கிரிஜா வைத்தியநாதன் டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் பொதுமக்களும் வணிகர்களும் தானே முன்வந்து, ஆளும் கட்சியின் இந்த மனிதாபமனமற்ற செயலை கண்டித்து இன்று கடையடைப்பை செய்துள்ளனர்.