பரபரப்பான அரசியல் சூழலில்,தமிழக முதல்வர் தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகின்றார்.

முன்னதாக,நேற்று அவசர அழைப்பின் பேரில்,டெல்லி சென்று பிரதமரை சந்தித்த  கவர்னர்,நேற்று  இரவு தமிழகம் திரும்பினார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்னர்,உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சுமார்  15 நிமிடம் தனித்தனியாக சந்தித்து பேசி,பின்னர் சென்னை திரும்பிய ஆளுநரை, தற்போது  தமிழக முதல்வர் சந்தித்து பேசி வருகிறார்

உடன் துணை முதல்வர்  ஓபிஎஸ்,அமைச்சர் சிவி சண்முகம், அமைச்சர் ஜெயகுமார்,  ஜெயவர்தாணன் எம்பி  மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இருந்தனர்.

அணைக்கப்பட்ட  லைட்

இதனிடையே, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆளுநர்  மாளிகையினுள் செல்லும் போது வெளியில் இருந்த  மின்விளக்கு அணைக்கப்பட்டது.அவர்கள் உள்சென்ற உடன் மீண்டும் மின்விளக்கு ஆன் செய்யப் பட்டது.

மீண்டும் வெளியில் வரும் போது மின்விளக்குகள் அணைக்கப்படும் என்றும், அவர்கள் காரில் ஏறியவுடன் மீண்டும் மின்விளக்கு ஆன் செய்யப்பட்டது

முதல்வர் மற்றும்  துணை  முதல்வர் தனித்தனி காரில் வந்தபோது அவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.