பகீரங்க மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்..! வீடியோ உள்ளே..!

செய்தியாளர்களையும், செய்திவாசிப்பாளர்களையும் தரக்குறைவாக எழுதி தனது  பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்த எஸ் விசேகர், அதில் உள்ள தவறான வார்த்தைக்கு எதிர்ப்பு கிளம்பியதும் உடனடியாக அதை நீக்கி விட்டார்.

பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் அந்தந்த மாவட்டத்தில்  ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

நேற்று சென்னை மைலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக கூடிய  செய்தியாளர்கள் அவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர்.

கல் எரிந்தும் போராட்டம் நடத்தப்பட்டதால், போலீசார் அவர்களை கைது செய்து பட்டிணப்பாக்கத்தில் உள்ள மீனவர் சமூக நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று இரவு 9 மணி அளவில் வெளியில் விட்டனர்

இந்நிலையில்,மேலும் எஸ்விசேகர் தன்னுடைய தவறான பதிவிற்கு விளக்கமும், மன்னிப்பும் கேட்டு செல்பி வீடியோ எடுத்து பதிவிட்டு உள்ளார்