Asianet News TamilAsianet News Tamil

சூர்யா அமைதியா இருப்பது ஆணவம்... நிம்மதியா இருக்க வேணாமா..? பிரபல பத்திரிக்கையாளர் ஆவேசம்..!

அந்தோணி சாமி எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மட்டும் கட்டினால் போதுமானது. 
 

Surya is arrogant to be quiet ... should be relaxed ..? Famous journalist obsessed ..!
Author
Tamil Nadu, First Published Nov 21, 2021, 12:53 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

ஜெய் பீம் சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் சூர்யா அமைதியா இருப்பது ஆணவம் என விமர்சித்துள்ளார் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன். 

’’உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கிறோம் என்கிற வார்த்தையை முன் வைக்கிறபோது கதை விவாதம் நடக்கிறபோது இதில் என்னென்னவெல்லாம் பின்விளைவுகள் வரும் என்று அவர்கள் கண்டிப்பாக உட்கார்ந்து பேசி இருப்பார்கள். அப்படி பேசுகிறபோது யாருடைய பெயர் எல்லாம் அப்படியே பயன்படுத்த வேண்டும். எந்தெந்த காட்சியில் சம்பவங்களை என்னென்ன காட்சிகளில் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் அவர்கள் முன்பே திட்டமிட்டு வைப்பார்கள்.Surya is arrogant to be quiet ... should be relaxed ..? Famous journalist obsessed ..!

 ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு இந்த பட கதையின் போது கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. சட்ட நுணுக்கங்களை அவர் நடத்திய இந்த வழக்கு தொடர்பான தகவல்களை அவர் சொல்லியிருப்பார். சம்பவம் நடந்தபோது இருந்து சட்டதிட்டங்களையும் தற்போது இருக்கிற சட்டதிட்டங்களையும் மனதில் வைத்து தற்போதைய நிலவரப்படி எங்கு பிரச்சனை வரும் என்பது அவருக்கு தெரியும். 

 ராஜாகண்ணுவின் மனைவி பெயரை மாற்றியிருக்கிறார்கள். மற்றவர்களையும் மாற்றியிருக்கிறார்கள். உளப்பூர்வமாக அந்த படம் இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த படம் வெளிவந்த பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய  சமுதாயமாக இருக்கிற வன்னியர் சமூகத்தில் இருந்து சில கருத்துக்கள் வெளிவரும் போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் இருக்கிறது.  நடிகர் என்கிற சூர்யா மூன்றாவது ஆளாக வருவார். சூர்யாவுக்கு அன்புமணி சில கேள்விகள் கேட்டு கடிதம் எழுதுகிறார். ஆனால் அவர் எழுப்பிய அத்தனை கேள்விகளிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. Surya is arrogant to be quiet ... should be relaxed ..? Famous journalist obsessed ..!


பொதுவாக ஒரு படம் வெற்றி பெறுவதற்கு அது வெளியாகி பணம் ஈட்டுவதற்கு சில பேர் சில வழிமுறைகளை பயன்படுத்துவார்கள். திட்டமிட்டு சர்ச்சைகளை உருவாக்கி அந்த சர்ச்சைகள் மூலம் படத்தை ஓட வைப்பது ஒரு வகை. ஜெய்பீம் படத்தில் ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் படம் உருவாக்கப் பட்டிருக்கிறது. ஒரு ஊரை காட்டும் போது அங்குள்ள மக்கள் அத்தனை பேரையும் கெட்டவர்களாக காட்டுகிறீர்கள். ஊராட்சி மன்ற தலைவரை கெட்டவராக காட்டுகிறீர்கள்.

இதில் எனக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து விளக்க வேண்டிய கடமை இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் உண்டு. இந்தப் படத்தில் எதிர்மறை கேரக்டராக வரும் அந்தோணிசாமியின் ஏன் மாற்றினீர்கள். அவர்  வசிக்கிற வீட்டில் உள்ள காலண்டரில் கலசம் புகைப்படத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று அன்புமணி கேட்கிறார். அந்தக் காட்சியின் பின்னணியில் காலண்டர் இல்லை என்று யார் கவலைப்பட்டார்கள். அந்தோணி சாமி எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மட்டும் கட்டினால் போதுமானது. 

அன்புமணி அந்த கலண்டரை ஏன் வைத்தீர்கள் என்று கேட்பதற்கு உரிமை இருக்கிறது. இந்த படத்தில் வரும் பெயர்களை அப்படியே பயன்படுத்தி இருக்கிறீர்கள். வில்லனாக சித்தரிக்கப்படும் அந்தோணிசாமி பெயரை அப்படியே வைத்து இருக்கலாமே. எதற்கு குருமூர்த்தி என்று பெயர் வைத்தீர்கள்? இது தொடர்பாக சூரியா விளக்கம் அளித்தது அபத்தமான வாதம். அன்புமணியின் கேள்விகளுக்கு சமாளித்து பதில் சொல்லத் தெரிந்த உங்களுக்கு இந்த படத்தில் உள்ள சர்ச்சைகள் குறித்து எந்த உள் நோக்கமும் இல்லை. இதை தவறு என்று நீங்கள் நினைத்தால் இந்த தவறு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று சூர்யா ஒரு வரி அந்த அறிக்கையில் சேர்த்திருந்தார் என்றால் இந்த பிரச்சினை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது.Surya is arrogant to be quiet ... should be relaxed ..? Famous journalist obsessed ..!

 அந்த தவறை மறைப்பது போல் அவரின் காயப்படுத்துவது போல் ஒரு சொத்தை விவாதத்தை வந்து முன்வைக்கிறார். சூரியா பல நல்ல காரியங்கள் செய்து கொண்டிருக்கிறார். ரஜினிக்கே இல்லாத துணிச்சல் சூர்யாவுக்கு இருந்தது என்பதை நான் பல நேரங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். வருத்தம் தெரிவிப்பதில் சூர்யாவுக்கு என்ன தடை?'' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios