அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தொடர்வதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு  அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்.

இதைதொடர்ந்து முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தை பதவி விலக வைத்து விட்டு அந்த இடத்திற்கு வர முயற்சித்தார்.

ஆனால் பன்னீர் செல்வம் பதவி விலகியதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைதண்டனை உறுதி செய்யப்பட்டது .

இதையடுத்து அவர் பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தொடர்வது செல்லாது என ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு எதிரான அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிறையில் உள்ள சசிகலாவிடம் கட்சி குறித்து ஆலோசனை கேட்டால் தவறில்லை எனவும் கருத்து கூறியுள்ளது.