இந்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .  நீதித்துறையில் உள்ள முக்கிய நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டனர் ,  பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்  பன்றிக்காய்ச்சலால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவந்தது ,   இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இதுதொடர்பாக  நீதிபதி சந்திரா சூட் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை ஒன்று வைத்தார். 

அதில்,   சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் திடீரென பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  இந்நிலையில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார் ,  இதையடுத்து  வழக்கறிஞர்கள் சங்கங்கள்,  மற்றும் நீதிபதிகளுடன்   தலைமை நீதிபதி  எஸ்.ஏ பாப்டே  ஆலோசனை நடத்தினார் இந்நிலையில் விரைவில் நீதிமன்ற வளாகத்தில் ஊழியர்கள்,  வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.