Asianet News TamilAsianet News Tamil

அடக் கொடுமையே.. வார இறுதி நாட்களில் ஊரடங்கு...? சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை.

முதல் அலையை விட இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளது.  

Suppression is cruel .. Curfew on weekends ...? Health Minister warns.
Author
Chennai, First Published Apr 12, 2021, 11:42 AM IST

மாநில அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் ஊரடங்கு தவிர்க்க முடியாததாகிவிடும் என கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா உச்சத்தை அடைந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கபளீகரம் செய்துள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த சில மாதங்களாக வைரஸ் காட்டுக்குள் இருந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

Suppression is cruel .. Curfew on weekends ...? Health Minister warns.

முதல் அலையை விட இரண்டாவது அலை மிகத்தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளது. அங்கு வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழுவின் ஆலோசனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டு வருகிறார். பெங்களூருவில் இதே வேகத்தில் கொரோனா பரவினால் தினசரி பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டும் என மருத்துவ நிபுணர்கள்  எச்சரித்துள்ளனர். இதனால் அடுத்து வரும் நாட்களில் வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கர்நாடகத்தில் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது, 

Suppression is cruel .. Curfew on weekends ...? Health Minister warns.

அங்கு மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் எழுச்சி பெற்றுள்ளது. ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் ஊரடங்கு அறிவிக்கும் முடிவு எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படும், அந்த நிலைக்கு மக்கள் அரசை தள்ளக்கூடாது. முகக் கவசம் அணிவதன் மூலம் கொரோனா சங்கிலியை உடைக்க முடியும். அரசு எடுக்கும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொடர்ந்து எந்த வகையிலும் மக்கள் பாதிக்காத வகையில் தொழில்கள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்றால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios