Asianet News TamilAsianet News Tamil

அலறி அடித்து ஓடிய கருணாஸ் ஆட்கள்... செல்போனில் கூவி அழைத்த நிர்வாகி!!

அண்ணன் சினிமாவில் பேசுவதைப்போல ஆவேசமாக பேசும் போது குஷியில் கைதட்டி கோஷமிட்ட ஆதரவாளர்கள் கைக்கு விளங்கு மாட்டியதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பதறி அடித்து ஓடியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள்.

supporters ran away when karunas gets arrested
Author
Chennai, First Published Sep 23, 2018, 11:32 AM IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. மேலும் முதல்வரே நான் அடித்துவிடுவேன் என பயந்து 100 போலீஸாரை அழைத்து வருகிறார் என்றும் கூவத்தூரில் நான் இல்லாமல் அரசாங்கம் உருவாகியிருக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதைத் தொடர்ந்து தான் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் இனி இது போல் பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். 

supporters ran away when karunas gets arrested

யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். இதில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீசார் கருணாஸ் வீட்டின் முன்புகுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன். துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள் நாங்கள். இந்த சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டு இருக்கிறது என ஆவேசமாக பேசிவிட்டு போலீசாருடன் கிளம்பினார்.

supporters ran away when karunas gets arrested

அவரது சாலி கிராமம் வீட்டில் வைத்து கைது செய்த போலீஸார் அவரை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சாலிகிராமம் வீட்டின் முன்பு கூடிய கருணாஸ் ஆதரவாளர்கள், அண்ணனை கைது செய்யக் கூடாது என கோஷமிட்டு மறித்தனர். இதனையடுத்து போலீசார் கோபப் பார்வை பார்த்ததால், அவரது ஆதரவாளர்கள்  அதித்து விடுவார்களோ என்ற பயத்தில்  பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். 

தொண்டர்கள் யாரும் பொலிசாருக்கு என்ற இடையூறும் செய்யாததால் கருணாஸை கைது செய்வதில் போலீசாருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை  , இதனால் ஆதரவாளர்கள்  இல்லாமல்லேயே காவல் நிலையத்துக்கு  கைது செய்து வந்தனர். நாங்க தான் மற்றவர்களெல்லாம் வேஸ்ட் என சினிமாவில் பேசும் வசனம் போல கம்பீரமாய் வாய்க்கு வந்த மாதிரி பேசும் போது, துள்ளி குதித்து ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள்,  அண்ணன் கைக்கு விளங்கு மாட்டியதும், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பதறி அடித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். அப்போது அங்கு இருந்த கருணாசின் ஆதரவாளர் ஒருவர் கோஷம் போடவும் மறியல் செய்யவும் கூட்டத்தை கூட்ட செல் போனில் கூவி கூவி அழைத்ததுள்ளார்.

supporters ran away when karunas gets arrested

பொதுவாகவே  அரசியல் கட்சி தலைவர்கள்  கைது செய்யப்பட்டால்  தொண்டர்கள் காவல் நிலையத்துக்கு சென்று தலைவர் வாழ்க, தலைவர் வாழ்க என கோஷமிடுவர், ஆர்ப்பாட்டம் நடத்துவர். ஆனால்  தலைவர் கருணாஸ் கைதானதும் அவரது ஆட்கள் தப்பி  ஓடியதை வைத்து கருணாஸ் காமெடி பீஸ் தான் என வலைதளங்களில் வருத்தெடுக்கின்றனர்.

"

Follow Us:
Download App:
  • android
  • ios