பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட 6 வார காலகெடுவுக்குப் பிறகும், வாரியம் அமைக்காமல், மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது மத்திய அரசு. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழகம் முழுவதும போராட்டம் வீர்யமடைந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்ம் என நடத்தப்பட்டு வருகிறது. 

அதிமுக, பாஜக தவிர எதிர்கட்சிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஓரணியில் நின்று போராடி வருகிறது.  திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, வரும் 11 ஆம் தேதி அன்று பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில், அரசியல் பாகுபாடின்றி தமிழகத்தின் ஒருமித்த குரல் மத்திய அரசுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் திமுக, பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொளகிறது என்று மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.