Asianet News TamilAsianet News Tamil

அடி தூள்.. தமிழகத்தில் 1 சதவீதமாக குறைந்தது கொரோனா பரவல்.. சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொற்று குறைந்து வருகிறது என பொதுமக்கள் அஜாக்கிறதையாக இருக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

superb .. Corona spread at least 1 percent in Tamil Nadu .. Health Secretary Action.
Author
Chennai, First Published Aug 20, 2021, 3:15 PM IST

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொற்று குறைந்து வருகிறது என பொதுமக்கள் அஜாக்கிறதையாக இருக்க கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டிற்கு இன்று 6.93 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக 21 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இதுவரை அரசு மற்றும் தனியார் இணைந்து 2.7 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று என்கிற பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளது.அதேபோல் தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு என 17 மாவட்டங்களில் 1 விழுக்காடுக்கு மேல் தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. 

superb .. Corona spread at least 1 percent in Tamil Nadu .. Health Secretary Action.

கொரோனா பரவல் விகிதம் 1 விழுக்காடுக்கு கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்வதற்கும், 1 விழுக்காடுக்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 விழுக்காடுக்கு குறைவாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் தடுப்பூசி என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் வராமலும், பாதிப்பை குறைக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது தடுப்பூசி அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மக்கள் வரத்து குறைந்துள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

superb .. Corona spread at least 1 percent in Tamil Nadu .. Health Secretary Action.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் இரண்டிலும் சேர்த்து 2.7 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசியை 10 லட்சம் பேர் கோவிஷூல்டு மற்றும் 3.5 லட்சம் பேர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தாமல் உள்ளனர். தமிழகத்தில் போலி தடுப்பூசி என்கிற நிலை இல்லை. அரசு அங்கீகாரம் வழங்கியவை மட்டுமே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. கோவின் செயலியில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளது. அவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று குறைந்து வருகிறது என பொதுமக்கள் அஜாக்கிறதையாக இருக்க கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

superb .. Corona spread at least 1 percent in Tamil Nadu .. Health Secretary Action.

தொடர்ந்து பேசிய பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம்,இதனிடையே பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம், பள்ளிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், உள்ளிட்ட வகையில் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை சார்பிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios