நோன்பு இருக்கும் போது ஓட்டுப் போடுறதுல என்ன கஷ்டம் !! ரம்ஜானுக்காக தேர்தலை ஒத்தி வைக்க முடியாது !! சுனில் அரோரா திட்டவட்டம் !!

https://static.asianetnews.com/images/authors/7c75b3b3-3057-52ee-ad74-0f9554f16f46.jpg
First Published 13, Mar 2019, 8:07 AM IST
sunil arora talk about electiod date
Highlights

மே 5 ஆம் தேதி முதல் ரம்ஜான் மாதம் தொடங்குவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ரம்ஜான் நோன்பு இருந்தாலும், வாக்குச்சாவடிக்கு  சென்று ஒரு சில மணிநேரம் செலவழிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? என்றும் தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணமே இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல்11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மே 5 முதல் ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலை ஒருமாதத்திற்குத் தள்ளிவைக்க வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர்  கெஜ்ரிவால் உள்ளிட்ட சிலர், தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தனர்.


இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதிலளித்துள்ளார். அதில், ரம்ஜான் மாதத்தைக் காரணமாகக் கொண்டு தேர்தலை ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

பள்ளித் தேர்வுகள், திருவிழாக்கள், விவசாய அறுவடைக் காலம், வானிலை உள்ளிட்ட காரணங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது” என்றும் “இஸ்லாமியர்கள் புனித நாளாகக் கருதும் வெள்ளிக்கிழமையில் தேர்தல் தேதி இருக்கக் கூடாது என்பதில்கூட ஆணையம் கவனம் செலுத்தியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ரம்ஜான் நோன்பு இருந்தாலும், வாக்குச்சாவடி சென்று ஒரு சில மணிநேரம் செலவழிப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது? என்றும் அரோரா, எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே போல ஏப்ரல் 18 ஆம் தேதி கிறிஸ்துவர்கள் கடைப்பிடிக்கும் புனித வியாழன் வர உள்ளது என்றும் ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதனிடையே மதுரையில் ஏப்ரல் 18 ஆம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் மதுரை மாவட்ட மக்களும்  தேர்தல் தேதியை மாற்றக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

loader