Asianet News TamilAsianet News Tamil

விஐய் பட வசூல் விட கம்மி தான் ஆனா, சம்பளம் இத்தனை கோடி வேணுமா? கைவிடப்பட்டதா ரஜினி முருகதாஸ் படம்!!

ரஜினி கேட்க்கும் சம்பளம் கட்டுப்படி ஆகாததால், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லாததால், வேறு தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாசிடமே கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓய்வெடுக்கப் போகிறாராம் ரஜினி.

Sun pictures and Lyca not ready to produce Rajini Film
Author
Chennai, First Published Dec 22, 2018, 2:23 PM IST

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் "சிவாஜி" படத்தில் நடித்த ரஜினி, அந்த படத்தில் வசூலை கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை கேட்டு வாங்கி வந்தார்.  படத்தயாரிப்பில் நஷ்டமானதால்  வேறு வழியே இல்லாமல், தாணு தயாரிப்பில்  ஒரு படம் நடித்தார். ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை  வாங்கினார். படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் வசூலில் சக்கைப்போடு போட்டது. ஆனால், தாணு  போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து நின்றார்

Sun pictures and Lyca not ready to produce Rajini Film

கபாலி வசூலை, மனதில் வைத்து வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் பேட்ட படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார். பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது. சர்கார் கதையை திருடிய பஞ்சாயத்தால், முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்று தகவல் கசிந்தது.

Sun pictures and Lyca not ready to produce Rajini Film

அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைகா தயாரிக்க விரும்புவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அப்படியென்றால் ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் தயாராகவுள்ள படத்தை தயாரிக்க போவது யார் என்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 100 கோடி ரூபாய். சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு அவர் கேட்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம் என்கின்றனர்.

ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு எதிரானது. தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் இருப்பதை ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலை விவரம் அம்பலமாகியது.

Sun pictures and Lyca not ready to produce Rajini Film

இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 100 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப் பணத்தில் படத்தை எடுப்பது? சரி மொத்தமாக 300 கோடி போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ் பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து வரும்?! இப்போதைக்கு படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போகிறாராம் ரஜினி.

Follow Us:
Download App:
  • android
  • ios