திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள் அஞ்சுகச் செல்வி, திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யாத குற்றத்துக்காக, அழகிரியின் மகள் மீது வருமான வரித் துறை சார்பில் 2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 -ம் தேதி, 12 வழக்குகள் தொடரப்பட்டன. 

இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அஞ்சுகச் செல்வி அழகிரி ஆஜராகவில்லை. 

இதையடுத்து அஞ்சுகச் செல்விக்கு  எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர் மதி உத்தரவிட்டார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது