sudden rejig in Indian PM cabinet
பிரதம மந்திரி மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், பல அமைச்சர்களின் பதவியில் தற்போது திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி, தனது சிகிச்சை முடிந்து திரும்பும் வரை ,இரயில்வேத்துறை அமைச்சரான பியூஷ் கோயலுக்கு நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ஸ்மிரிதி இராணியிடம் இருந்து ராஜவர்தன் சிங் ரத்தோரின் பொறுப்புக்கு சென்றிருக்கிறது. அதற்கு பதிலாக ஸ்மிரிதி இராணி ஏற்கனவே தான் இருந்த ஜவுளித்துறையின் அமைச்சராக தனது பதவியை தொடரவிருக்கிறார். வெங்கைய நாயுடு தனது பதவியை ராஜினாமா செய்தபோது ஸ்மிரிதி இராணிக்கு , தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை கூடுதல் பொறுப்பாக தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.அலுவாலியா இனி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையையும் அல்போன்ஸ் கே.ஜே சுற்றுலாத்துறையையும் இனி நிர்வகிப்பார்கள் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது
