செட்டியாருக்கு உங்க வாக்கு..? ப.சிதம்பரத்திற்கு எதிராக கடைசி நேரத்தில் களமிறங்கிய சுதர்சன நாச்சியப்பன்..!
செட்டியாருக்கு உங்க வாக்கு என்கிற ரீதியில் தன்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தொடர்புகொண்டு சுதர்சன நாச்சியப்பன் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
செட்டியாருக்கு உங்க வாக்கு என்கிற ரீதியில் தன்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தொடர்புகொண்டு சுதர்சன நாச்சியப்பன் எதிர்மறை பிரச்சாரம் செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டத்தட்ட சுதர்சன நாச்சியப்பன் கிடைத்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள தொடர்புகளை பயன்படுத்தி சுதர்சன நாச்சியப்பன் கொடுக்கப்பட்ட வாய்ப்பை தட்டிப் பறித்து தனது மகனிடம் சிதம்பரம் கொடுத்து விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ப சிதம்பரத்தால் காங்கிரஸ் கட்சி அழியப்போகிறது என்று கொந்தளித்தார் சுதர்சன நாச்சியப்பன்.
ஆனால் சுதர்சன நாச்சியப்பன் வீட்டுக்கே சென்று கார்த்திக் சிதம்பரம் தனக்கு ஆதரவு கோரினார். இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கார்த்தி சிதம்பரத்தை வெற்றி பெற வைக்க தான் பாடுபடப் போவதாக கூறி பிரச்சனை சுமூகமாக விட்டது என்கிற ரீதியில் பேசிவிட்டுச் சென்றார் அவர்.
ஆனால் சுதர்சன நாச்சியப்பன் கார்த்திக் சம்பவத்திற்காக தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இதனால் பிரச்சனை எதுவும் இல்லை என்று தான் சிதம்பரம் தரப்பும் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாய அமைப்புகளைத் தொடர்பு கொண்டு ஒரு செட்டியார் தங்களுடைய வாக்குகளை கொடுக்க போகிறார்கள் என்கிற ரீதியில் சுதர்சன நாச்சியப்பன் பேசி வருவதாக கூறுகிறார்கள்.
இதேபோல் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை தட்டிப்பறித்த சிதம்பரத்திற்கு தேர்தல் வேலை பார்க்கிறார்கள் என்றும் கொம்பு சீவி வருவதாகவும் சொல்கிறார்கள். இதனை தாமதமாக அறிந்த ப சிதம்பரம் தரப்பு முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கூடுதல் கவனிப்பு கொடுத்து வருவதாக பேசப்படுகிறது.