அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக புறக்கணித்தது ஆளுநரை திருப்திப்படுத்தும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக புறக்கணித்தது ஆளுநரை திருப்திப்படுத்தும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதே மக்களுக்கு எங்கள் வாக்குறுதி. நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது ஆளுநரை ஆதரிக்கும் போக்காகவே பார்க்க முடிகிறது. நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆனால், இந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதனையடுத்து, அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், எனவே, நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது ஆளுநரை திருப்திப்படுத்தும் செயல் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக புறக்கணித்தது ஆளுநரை திருப்திப்படுத்தும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. மேலும், சமூக அக்கறை உள்ளவர்களை ஒன்றினைக்கவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக நீதி கூட்டமைப்பை அறிவித்தார். ஆனால், சமூக நீதி கூட்டமைப்பிற்கு தன்னை தலைவர் என முதல்வர் கூறவில்லை என்பதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் எங்களின் முழு நோக்கம். மேலும், உள்ளாட்சி தேர்தலில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தருவதே எங்கள் வாக்குறுதி என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.