Asianet News TamilAsianet News Tamil

பீதியை விஞ்சி நிற்கும் உண்மை.. புள்ளி விவரத்தை வெளியிட்டு அமைச்சருக்கு பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்..!

அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதும் உண்மையான நிலைமை என எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 

su. Venkatesh retaliated against the minister udhayakumar
Author
Tamil Nadu, First Published Jul 22, 2020, 1:24 PM IST

அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதும் உண்மையான நிலைமை என எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஜூன் 26 ஆம் தேதி சில புள்ளிவிபரங்களின் அடிப்படையில் “மதுரைக்கு முதல்வர் உடனடியாக உதவ வேண்டும்” என்ற அறிக்கையொன்றினை வெளியிட்டேன். அதற்கு மறுநாள் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் , ”எம்.பி., முதல்வருக்குக் கடிதம் எழுதுவதாகச் சொல்லி, தேவையில்லாமல் மக்களிடம் பீதியைக் கிளப்புகிறார்” என்று கூறினார்.

su. Venkatesh retaliated against the minister udhayakumar

அன்றைய அறிக்கையில், “மதுரையில் தொற்றுப் பரவும்வேகம் 7.9% ஆக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் ஜூலை 21 ஆம் தேதி மதுரையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7883 ஆக இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தேன். இதனைத்தான் அமைச்சர் பீதியை கிளப்புவதாகச் சொன்னார். ஆனால், இன்று (ஜூலை 21) மதுரையில் 8517 தொற்றாளர்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

su. Venkatesh retaliated against the minister udhayakumar

பீதியை விஞ்சி நிற்கிறது உண்மை. அமைச்சரும் அரசும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று; வருமுன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதும் உண்மையான நிலைமையை எப்படியாவது உங்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதுதான். அதற்குத்தான் தொடர்ந்து முயல்கிறோம் . . .முயல்கிறோம் . . .முயன்றுகொண்டே இருக்கிறோம் என  பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios