கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்க தாமதமாக வந்த அத்துறையின் அமைச்சர் பாலகிருஷ்ணாவை மாணவர்கள் மற்றும் பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் மத்திய அரசு மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு  அவசியம் என உத்தரவிட்டது. இதனால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி முடித்தது. ஆனால் மாணவர்கள் பலர் தேர்வில் தோல்வியையே தழுவினர். இதனால் மாணவர்கள் கால்நடை மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில், வேப்பேரி கால்நடை மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காலை முதல் காத்திருந்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் பாலகிருஷ்ணா  தாமதாக வந்தார். இதனால் ஆத்திரமைடைந்த பெற்றோர் மற்றும் மாணவர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நீட் தேர்வு நடத்தியதால் தான் எங்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தான் கால்நடை படிப்பில் சேருகிறோம் என கோரி மாணவர்கள் கொஷங்களை எழுப்பினர்.

மேலும் தமிழக அரசுக்கு எதிராகவும், மோடி அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  

இதையடுத்து போலீசார் அமைச்சர் பாலகிருஷ்ணாவை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.