நீட் தேர்வில் முழு செக் அப் என்ற பெயரில் அதிகாரிகள் இழிவாக நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு விதிமுறை கொண்டு வந்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதனிடையே தமிழக சட்ட சபையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவும் தமிழக அரசு கொண்டு வந்தது. அதை நடைமுறை படுத்த குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கடைசிவரை பெற முடியவில்லை.

இதனால் நீட் தேர்வு இருக்காது என எதிர்பார்த்திருந்த மாணவ மாணவிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு வழியாக இன்று மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது. நீட் தேர்வை நடத்தினாலும் அதை நடத்துவதற்காக கடைபிடிக்கப்பட்ட வரைமுறைகள் தான் சகித்து கொள்ள முடியவில்லை.

நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளின் வெற்றுடலை தவிர அனைத்தையும் அதிகாரிகள் பரிசோதித்த பிறகே தேர்வு அறைக்குள் ணைமதிக்கபட்டனர்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது.

நீட் தேர்வு கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை. அதனை தான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்று சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக தீர்மானமாக கொண்டு வரப்பட்ட போதிலும் மனதார வரவேற்றோம்.

ஆனால் அப்படிப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு செய்தி வரவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம்.

நேற்றைய தினம் நீட் தேர்வின் போது மாணவர்கள் அவமானப்பட்டது கடும் கண்டனத்திற்குறியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.