ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மருது கணேஷ், மதுசூதனன், டி.டி.வி.தினகரன், கங்கை அமரன் உள்ளிட்ட 62 பேர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

நேற்று வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

சசிகலா அணி சார்பில் போட்டியிடும்  டி.டி.வி தினகரன், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய வார்டுகளில்  உள்ள நேதாஜி நகர், செழியன் நகர், கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து வந்தார். 

அப்போது அவர் மதுசூதனனுக்கு   வழங்கப்பட்டுள்ளது    சின்னம் மின்விளக்கு தான். ஆனால் அவர்கள் இரட்டை மின்விளக்கு என திரித்து பிரச்சாரம் செய்த வருவதாக குற்றம்சாட்டினார்.

அந்த சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை போன்று வடிவமைத்து ஏமாற்றி வரவதாற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்போவதாக, மதுசூதனனின் சின்னத்தை முடக்க வேண்டும் என்று நேரில் சந்தித்து மனு கொடுக்கவுள்ளதாகவும் தினகரன் கூறினார்.

அப்போது அங்கு இருந்த மஞ்சு என்ற மாணவியும் அவருடைய தாயும் டி.டி.வி தினகரனிடன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள், ஆனால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தினகரன் திணறினார்.

ஓட்டு கேக்க மட்டும் அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வர்ரீங்க, ஆனால் ஜெயிச்சா வருவிங்களா? என்ற அந்த முதல் கேள்விக்கு தினகரன் கண்டிப்பாக வருவேன் என கூறினார்.

நீங்க அறிவிக்கற திட்டம் எதுவும் மக்களுக்கு முழுசா  வந்து சேர்வதுயில்லை? ஆறு வருஷமா ஆட்சில இருக்கீங்க என்ன செய்தீங்க ? என மாணவியும் அவரது தாயாரும் மாறி, மாறி கேள்விகள் எழுப்பி தினகரனை திணரடித்தனர்.

இந்த கேள்விகளுக்கு தினகரனால் பதில் அளிக்க முடியாததால்அந்த மாணவியையும் அவருடைய தாயாரையும் அங்கு இருந்த தொண்டர்கள் துரத்த தொடங்கினர்.

உடனே அந்த மாணவி   நான் ஒட்டு போடுறன், கேள்வி கேட்பேன். யாராக இருந்தாலும் பதில் சொல்லியே ஆகனும் என ஆவேசமானார்.

இதையடுத்து தினகரனும் அவரது கட்சியினரும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர்.