Asianet News TamilAsianet News Tamil

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்... கம்முனு இருந்தா எப்படி..? சூர்யாவை வம்பிழுக்கும் பாஜக..!

இந்த விவகாரத்தில் சூர்யா குரல் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

Student Lavanya suicide case ... How come from Kammunu ..? BJP harassing Surya
Author
Tamil Nadu, First Published Jan 23, 2022, 4:21 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணம் மதம் மாற கட்டாயப்படுத்தியதாக தான் தற்கொலை என்று ஒருபக்கம் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விடுதி வார்டன் மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தமிழக பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.Student Lavanya suicide case ... How come from Kammunu ..? BJP harassing Surya

இதற்கிடையே மாணவி அளித்த இறுதி வாக்குமூலத்தில், கடந்த ஆண்டுகளாக விடுதியில் தங்கி படித்து வருகிறேன். விடுதி வார்டன் என்னை மட்டும் கணக்கு வழக்குகளை பார்க்கச் சொல்லுவார். இதனால் விடுமுறைக்கு கூட என்னை வீட்டிற்கு அனுப்ப மாட்டார். வீட்டில் இருந்து யார் கேட்டாலும் ஒழுங்காக படிப்பார் என்று சொல்லி விடுவார். உடம்பு சரியில்லை என்றால் கூட என்னை விட்டுவிட மாட்டார். இதனால் விரக்தி அடைந்த நாள் கடந்த 9ஆம் தேதியன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன்.Student Lavanya suicide case ... How come from Kammunu ..? BJP harassing Surya


உடம்பு சரியில்லை என்று ஊருக்கு சென்றேன். வாய், நாக்கு தொண்டை எரிச்சல் அதிகமாக இருந்ததால் மருந்து குடித்த விஷயத்தைச் சொன்னேன். விடுதி வார்டன் என்னை தொடர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்க சொன்னதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று மரண வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட அனிதா வீட்டிற்கே சென்று தூக்கம் விசாரித்த நடிகர் விஜய், ஜி.வி.பிரகாஷ் , தங்களை சமூக நல விரும்பிகளாக காட்டி கொள்ளும் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மற்றும் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் ஆகியோர் இது குறித்து வாய் திறக்கவில்லை.

 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சூர்யா குரல் கொடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பாஜக தேசிய துணை செயலாளர் முருகானந்தம் தனது ட்விட்டர் பதிவில், ‘’நடிகர் சூர்யா அவர்களுக்கு, மதம் மாற வற்புறுத்தி, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தி, மாணவி லாவண்யாவின் இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்து குரல் கொடுங்கள். இன்னும், நேரம் கடந்து விடவில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios