சென்னை கே.கே.நகரில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பள்ளி மாணவன் பந்தை எடுக்க ஓடும் போது விபத்தில் சிக்கி பலியானார். 

சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் சுகுமார்(42) . கூலித்தொழிலாளி. இவரது மகன் விக்னேஷ்(16). மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் லீவு நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். 

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எனபதால் வழக்கம் போல் நண்பர்களுடன் கே.கே.நகர் 14 வது செகடரில் உள்ள மாந்கராசி பள்ளி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். 

பேட்ஸ்மேன் அடித்த பந்து சுவரை தாண்டி சாலைக்கு செல்லவே அதை எடுக்க மைதான சுவரை தாண்டும் போது தவறி அருகிலிருந்த கம்பியில் விழுந்ததில் வயிற்றில் கம்பி குத்தியதில் பலத்த காயமடைந்தார். 

உடனடியாக அருகில் உள்ளவார்கள் அவரை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதால் உடனடியாக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.