இல்லையேல் காசு கொடுத்து கட்சிக்கு ஓட்டு போட வைத்து விடுவார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே ஆண்டுகளாகவே பாமக மூன்றாவது கட்சியாக தமிழகத்தில் இருந்து வருகிறது, இந்த தேர்தலில் 80% வெற்றி பாஜக விற்கு கன்னியாகுமரியில் கிடைக்க பெற்றதால் தான் இந்த தேர்தலில் பாஜக மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 43சதவீத வாக்குகளை மட்டுமே பதிவு செய்த சென்னை மக்களின் அடிப்படை வசதிகளை நிறுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாமக சார்பில் 2022-23 நிதியாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையினை பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏகே மூர்த்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர். இந்த மாதிரி நிதிநிலை அறிக்கையை ஒட்டுமொத்தமாக 87 தொகுப்புகளாக 296 யோசனைகளுடன் புத்தகமாக வெளியிட்டுள்ளது பாமக. 

முக்கிய அம்சங்களாக இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில், 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படுவது, வேளாண் விளைபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல் ஆணையம், பொதுத்துறை வங்கி கடன்கள் தள்ளுபடி, வேளாண் துறையில் 3 புதிய அமைச்சகங்கள் உருவாக்கப்படுவது, மணல் குவாரிகளை திறக்கப்படாமல் தடுப்பது, தமிழ்நாட்டை ஹைட்ரோ கார்பன் இல்லாத திட்டமாக உருவாக்குவது, சிறுதானிய விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை உருவாக்குவது, வெள்ள பாதிப்புகள் ஏக்கருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கான நிதி நிலை அறிக்கையை, ஆவணம் செய்து புத்தகமாக வெளியிட்டுள்ளது பாமக.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்... அப்போது அவர் பேசியதாவது, புத்தகமாக வெளியிட பட்டுள்ள இந்த அறிக்கையை தமிழக அரசு கண்டிப்பாக ஏற்று கொள்ள வேண்டும். இதனை வெளியிட்டால் கூட எங்களுக்கு மகிழ்ச்சியே! எங்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு தமிழக அரசு கடந்த முறை தான் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்தமுறை கூடுதல் ஆலோசனைகளை இந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளோம். தமிழக அரசு வேளாண் பட்ஜெட் வெளியிடுவது பாமகவுக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்தில் 60% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளர்கள், ஆனால் அவர்களுக்கு வெறும் 13,000 கோடி நிதி ஒதுக்கீடு போதாது! ஆளும் கட்சியும் சரி, ஆண்ட கட்சியும் சரி நடந்து முடிந்த நகர்புற உள்ளாச்சி தேர்தலில் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், இது பணத்திற்கு கிடைத்த வெற்றி. 

இனி வரும் தேர்தலில் கட்சி சின்னத்தை தவிர்த்து, அனைவருக்கும் சுயேட்சை சின்னம் கொடுத்தால் தான் மக்கள் மக்களுக்கு ஓட்டு போடுவார்கள். இல்லையேல் காசு கொடுத்து கட்சிக்கு ஓட்டு போட வைத்து விடுவார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே ஆண்டுகளாகவே பாமக மூன்றாவது கட்சியாக தமிழகத்தில் இருந்து வருகிறது, இந்த தேர்தலில் 80% வெற்றி பாஜக விற்கு கன்னியாகுமரியில் கிடைக்க பெற்றதால் தான் இந்த தேர்தலில் பாஜக மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. எங்கள் நோக்கம் பாஜக வுடன் ஒப்பிடுவது அல்ல, நாங்கள் வேறு பாதையில் செல்கிறோம், அவர்கள் வேறு பாதையில் செல்கிறார்கள். சென்னை மக்கள் இந்த முறை தேர்தலில் 43 சதவிகித வாக்கு மட்டுமே அளித்துள்ளார்கள், அவர்களுக்கான எல்லா அடிப்படை வசதிகளையும் நிறுத்த வேண்டும்.

அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க பட்டுமே, சென்னை மக்கள் ஜனநாயக கடமை ஆற்றவில்லை ஏன்? மேலும் கூட்டணி குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு, ஒருமித்த கருத்துக்களை கூறும் யாராக இருந்தாலும், அவர்களோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயார் என கூறனார். வாக்களிப்பது ஜனநாயக கடைமை என கூறி மக்களை வாக்களிக்க செய்ய வேண்டியது அரசு , அரசியல் கட்சிகளின் கடமை, அதில் மக்களுக்கும் பங்குண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை, ஆனால் சென்னையில் வெறும் 43 சதவீதம்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் அதனால் அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறுத்த வேண்டும் என பாமக அன்புமணி விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.