sterlite protest three people dies

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் அமைதியான முறையில் 100 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட முடிவு எடுத்தனர், இதற்காக வணிகர்கள் இன்று முழுவதும் கடையடைப்பு நட்த்தி பேரணியாக சென்று முற்றுகையிட திட்டமிட்டனர்.

இந்த பேரணிக்கு போலீஸ் தடை உத்தரவு போட்ட்து.144 தடை உத்தரவை மீறி காலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை பல்வேறு வகையில் காவல்துறை தடுத்து பார்த்த்து. போராட்டக்கார்ர்கள் காவல்துறை வாகனத்தை கவிழ்த்தி போட்டு சூறையாடினர்.

மேலும் கற்களை கொண்டுகாவல்துறையை தாக்கவும் செய்தனர். இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொழுத்தினர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டக்கார்ர்கள் தொடர்ந்து போராட முடிவு எடுத்துள்ளனர் எனத் தெரிந்த்தும் காவல்துறை கண்ணீர் குண்டு வீசியும், வஜ்ரா வாகனத்தை கொண்டு மக்களை விரட்ட முனைந்தனர்.

காவல்துறை துப்பாக்கி சூட்டில் இறங்கியது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். போலீஸ் தடியடி நடத்தியதில் மக்கள் பலர் காயமடைந்துள்ள்னர். ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர்.

மீண்டும் ஒன்று திரட்ட போராட கூடிய மக்கள் வானை நோக்கி சுட்டு போலீஸ் போராட்டக்காரர்களை கலைக்க தொடங்கியுள்ளது.

காவல்துறை துப்பாக்கி சூட்டில் மூவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பான 6மாடி கட்டிடம் தீப்பற்றி எரிகிறது. உள்ளே சிக்கியிருப்பவர்கள் நிலை கவலைக்கிடம்

.முதல்வர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்