Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு... கனிமொழி போட்ட கண்டிஷன்..!

மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Sterlite plant opening ... Kanimozhi planting condition ..!
Author
Tamil Nadu, First Published Apr 26, 2021, 11:15 AM IST

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்ததால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றமும், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, ஆர்.எஸ். பாரதி பங்கேற்றனர்.Sterlite plant opening ... Kanimozhi planting condition ..!

அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்கலாம். அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை வேறு எந்த பணிகளையும் செய்யவும் அனுமதிக்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.Sterlite plant opening ... Kanimozhi planting condition ..!

அப்போது பேசிய திமுக தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி, ‘’ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது.  மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios