தூத்துக்குடியில்  காற்று மாசுபடுதலுக்கு முக்கிய காரணியாக விளங்கிய ஸ்டெர்லைட் தாமிர ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 13 பேர்துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமோ, தாமிர ஆலையை மீண்டும் திறக்கும்முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில், தீபாவளி பண்டிகயை யொட்டி  துறைமுக ஊழியர்களுக்கு  ஆண்டு தோறும்வழங்குவது போல, நேற்று மாலை அனைவருக்கும் பார்சல்கள் வழங்கப்பட்டன.அதில் தீபாவளி பரிசாக இனிப்புகளும், உலர் பழங்களும் இருந்தன.

13 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஸ்டெர்லைட் தரும் இனிப்பு தங்களுக்கு தேவையில்லை  என  கூறிய  துறைமுக ஊழியர்கள், அதனை ஏற்க மறுத்து வீதியில் கொட்டி ஸ்டெர்லைட்டை கண்டித்து கோஷமிட்டனர்.