இந்திய அரசியல்  சட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு இந்தியாவிலேயே ஓர் இளம் முதல்வர் 125 அடியில் சிலை அமைக்க இருப்பது ஆந்திராவில் தான். அம்பேத்கரின் மொழி புலமை அரசியல் சமூகம் என அனைத்து துறைகளில் சிறந்த சக்தியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆந்திராவின் விஜயவாடா நகரின் மையத்தில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கரின் 125 அடி சிலைக்கு முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இயிணையாக தற்போது டாக்டர் அம்பேத்கருக்கு 125 அடியில் சிலை அமைக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் முயற்சி எடுத்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தநிகழ்ச்சியில் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் பேசிய முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, அம்பேத்கரின் சேவைகளை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில் 20 ஏக்கர் பூங்காவில் சிலை கட்டப்படும்.டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் ஒரு சிறந்த சக்தி என்றும்மொழியில் தேர்ச்சி பெறுவதற்கான தனது உறுதியின் மூலம் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை அம்பேத்கர் நிரூபித்துள்ளார்  அவர் பேசினார்.

பூங்காவை அதன் அழகிய சூழலுடன் ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யுமாறு சமூக நலத்துறை அமைச்சர் விஸ்வா ஸ்வரூப்பிற்கு முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.பூங்காவின் இடத்திலிருந்து வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.