Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கிய மத்திய அரசு.!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலகங்களில் தேவைப்பாட்டால் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

State governments may impose restrictions to control the corona
Author
Delhi, First Published Mar 24, 2021, 5:16 PM IST

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலகங்களில் தேவைப்பாட்டால் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

State governments may impose restrictions to control the corona

அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதிய உள்ள கடிதத்தில்;- வர உள்ள ஹோலி, ஈஸ்டர், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளின் போது, பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 

State governments may impose restrictions to control the corona

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் அலட்சியாக இருப்பது இதுவரை வந்த பலன்களை சீர்குலைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios