ஒண்டிக்கு ஒண்டி மோதலை எப்போது வைத்துக் கொள்ளலாம்? என மு.க.ஸ்டாலினை மோதலுக்கு அழைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

 

இதுகுறித்து மேலும், அவர், ’’ 17.5 லட்சம் வாக்கு இப்போ விழுந்திருக்கு. நம்மை எதிர்ப்பவர்கள் கூட அது நேர்மையாக விழுந்த வாக்கு என்று ஏற்றுக் கொண்டார்கள்.  இதிலிருந்து தூய அரசியல் வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் நமக்கான வாக்குகள் குறைந்துள்ளது. இதற்கு காரணம், இவர்கள் வந்தால், பாஜக வந்து விடும் எனச் சொல்லி சொல்லியே குறைத்து விட்டார்கள். 

ஆட்சி கவிழ்ப்பு பத்தியே திமுக தலைவர் பேசினாரே, ஏன் பாஜகவை பற்றி பேசவில்லை? பணமதிப்பு இழப்பில் ஏற்பட்ட பாதிப்பை, சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி கூராய்ந்து பேசிய ஒரு பேச்சு உண்டா? மாட்டுக்கறி தின்றவனை அடித்து கொன்றது பத்தி ஒரு கண்டன பேச்சு உண்டா? இங்கே, இவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இவ்வளவு காசு கொடுத்தும் சீமானுக்கு ஓட்டு போட்டு இருக்காங்களே என்பது தான்.

ஆனால், ஓட்டுக்கு காசு தரக்கூடாது. கூட்டத்துக்கும் காசு கொடுத்து ஆள் கூட்டி வர கூடாது. நாம மோதறோம். ஒண்டிக்கு ஒண்டி மோதுறோம். எப்ப வச்சுக்கலாம் நம்ம மோதலை? சரி.. இப்ப ஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க? ஒண்ணும் செய்ய முடியாது. அந்த அம்மா கையில 37 பேர் இருந்தே ஒண்ணும் பண்ண முடியல. இப்போ ஒன்னும் இல்லாதவங்ககிட்ட 37 பேர் இருந்தா மட்டும்? என்ன செய்யப்போறாங்க? ‘’ என அவர் கேள்வி எழுப்பினார்.