40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதரின் வரலாற்றில், முதல்வர்களாக இருந்தவர்களில் எவருக்கும் கிடைக்காத பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது.

 காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 48 நாட்களாக நடைபெற்ற தரிசன நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அரிய அத்திவரதரை, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்துள்ளனர். 


கடைசி நாளில் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து ஆகம விதிகளின் படி, நள்ளிரவில் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டது.  அங்குள்ள நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அதன் அருகில் நாக சிலைகளும் வைக்கப்பட்டன. அடுத்த 40 ஆண்டுகள் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருப்பார். 

இதையொட்டி சிலை பாதிக்கப்படாமல் இருக்க மூலிகைகள் கலந்த தைலக்காப்பு பூசப்பட்டது. இந்நிலையில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றதை குறிக்கும் வகையில், அனந்தசரஸ் குளத்தில் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

அதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அத்திவரதரின் வரலாற்றில் எடப்பாடி கே.பழனிசாமியும் ஒரு அங்கமாக இடம்பிடித்துள்ளார்.  அவரது பெயௌடன் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேவூர் ராமச்சந்ந்திரன், கலெக்டர் பொன்னையா ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. 

அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்பட்ட உடன், ஐதீகப்படி மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அவ்வாறே காஞ்சிபுரத்தில் மழை பெய்து பக்தர்களை பரவசப்படுத்தியது. இனி வரும் 2059ஆம் ஆண்டு தான், அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே வந்து, பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது யார் முதல்வராக இருப்பார்களோ தெரியாது. 

ஆக மொத்தத்தில் முன்னாள் முதல்வர்களுக்கு கிடைக்காத பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். அது மட்டுமல்ல. அடுத்து ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி முதல்வராக வந்தாலும் எடப்பாடியின் இந்த பெருமையை முறியடிக்க முடியாது.