மாணவர்கள் கையிலெடுத்த எந்த போராட்டமும் தோற்றதில்லை, அரசியலை தாண்டய மாணவர் போராட்டம் வெல்லும் என்று மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பேசினார்.
தடையை நீக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடாத நிலை. மத்திய அரசு முற்றிலும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நிலை. ஆனால் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் போது பொன்ராதா கிருஷ்ணன் போன்றோர் தமிழகத்துக்கு வரும் போது உறுதி தருகிறார்கள் , இந்த ஆண்டு நடக்கும் இந்த ஆண்டு நிச்சயம் நடக்கும் என்கிறார்.

கடந்த ஆண்டும் இதே போன்று சொன்னார்கள். ஆனால் நடக்கவில்லை, இவர்கள் ஆளும் மத்திய அமைச்சர்கள் வேறு நிலைபாட்டை எடுக்கிறார்கள். இத்தகைய இரட்டை நிலைபாட்டைத்தான் பார்க்கிறோம்.
ஆனால் அரசியலை தாண்டி இன்று மாணவர்கள் போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள். மாணவர்கள் கையில் எடுத்த எந்த போராட்டமும் தோற்றதில்லை. 1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அது தடுக்கப்பட்டது. இன்று நீங்கள் நம் பாரம்பரியத்தை காக்கும் போராட்டத்தில் குதித்துள்ளீர்கள் அது வெற்றி பெறும்.

மாணவர்கள் தமிழை தமிழ் உணர்வை , நம் இனத்தை காக்க , மானத்தை காக்க போராட்டம் நடத்தும் திமுகவுக்கு மாணவர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். மாணவர்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும் என் வாழ்த்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
