தமிழக மீனவர்கள் , இலங்கை மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றுகொண்டிருக்கும் போதே மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்திருப்பது கண்டிக்கத்தது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: 
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர், பாண்டிச்சேரியைச் சேர்ந்த மீனவர்களும் எல்லையில் தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த இலட்சணத்தில் டெல்லியில் தமிழகத்தைச் சார்ந்திருக்க கூடிய அமைச்சர் இங்கிருக்ககூடிய மீனவ சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அதேபோல இலங்கை தூதரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

எந்தவிதமான பலனும் இல்லை. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும் பொழுதே மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. ஆகவே, மத்திய மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உடனடியாக இலங்கையில் இருக்ககூடிய அந்த தூதரக அதிகாரிகளையாவது சந்தித்து இதுகுறித்து முறையிட வேண்டுமென்பது தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.