Asianet News TamilAsianet News Tamil

தேமுதிக-வை இப்படி சொல்லிட்டாரே ஸ்டாலின்....!

திமுக மற்றும் தேமுதிக இடையே பனிப்போர் நிலவி வருகிறது. பிரெஸ் மீட் வைத்து வைத்தே காலத்தை கடத்திவிடுவார்களோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்து உள்ளது...

stalin talks about vijayakanth party
Author
Chennai, First Published Mar 8, 2019, 5:50 PM IST

திமுக மற்றும் தேமுதிக இடையே பனிப்போர் நிலவி வருகிறது. பிரெஸ் மீட் வைத்து வைத்தே காலத்தை கடத்திவிடுவார்களோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்து உள்ளது...

அட எப்பதான்பா கூட்டணி பற்றி ஒரு முடிவு எடுக்க போறீங்கன்னு தேமுதிகவினரே ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதற்கிடையில் ஒரே நாளில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது தேமுதிக என்ற குற்றசாட்டு எழுந்தது.

இதற்கு முன்னதாக, விஜயகாந்தை அவரது இல்லம் சென்று சந்தித்து வந்த ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவே சொல்லி இருந்தார். 

stalin talks about vijayakanth party

ஆனால் அன்றைய தினத்தில் கூட்டணி குறித்து ஸ்டாலின் பேசினார் என பேட்டியில் பிரேமலதா தெரிவித்து உள்ளார். காரணம் நேற்றைக்கு, தேமுதிக தரப்பிலிருந்து இருவர் கூட்டணி குறித்து பேச பொருளாளர்  துரைமுருகனை சந்திக்க சென்று உள்ளனர். ஆனால் இது குறித்து பேட்டி அளித்த துரைமுருகனோ அவர்களில் யாரோ 2 பேர் வந்தனர் என்று கிண்டலாக சொல்ல, இன்றைய மீட்டிங்கில் துரைமுருகனை பற்றி வருத்து எடுத்துவிட்டார் பிரேமலதா. மேலும் ஒரு வீட்ல பெண் இருந்தா, பத்து பேர் பெண் பார்க்க வர தானே செய்வாங்க அதுபோல. கூட்டணி குறித்து திமுக அதிமுக எல்லாம் பேச்சுவார்த்தையில் தான் உள்ளது என்பதை மறைமுகமாக தெரிவித்து இருந்தார்.

stalin talks about vijayakanth party

அதே வேளையில், திமுக வில் தேமுதிகவுக்கு கொடுக்க சீட் இல்லை என்ற நிலைப்பாடு உள்ளதாலும், அதே வேளையில் அதிமுக உடன் தேமுதிக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாலும் சற்று கடுப்பான ஸ்டாலின்... இன்று காலை செய்தியாளர் சந்திப்பின் போது, “ரஃபேல் ஆவணங்களையே பாதுகாக்க முடியாத பிரதமர் மோடி நாட்டை எப்படி பாதுகாப்பார்?” என்ற கேள்வியை முன் வைத்து கூடவே, “தேமுதிகவினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்களோ என்ற அதிமுக அரசின் அச்சத்தினால் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கலாம்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக பதிலால் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டாலினின் இந்த கருத்து தேமுதிக மற்றும் அதிமுக வைத்து கட்சிகளிடேசியே கோபத்தை உண்டாக்கி உள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios