மோடி சில மந்திரங்களை உச்சரித்து சில தந்திரங்களைத் தமிழகத்தில் செய்யப்பார்க்கிறார். ஆனால் அவரது தந்திரம் தமிழகத்தில் பலிக்காது: என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
லிம்காவில் லம்பாக இடம்பெறும் ஸ்டாலின்!: அடடா அரசியல் அதிசயம்.
* மோடி சில மந்திரங்களை உச்சரித்து சில தந்திரங்களைத் தமிழகத்தில் செய்யப்பார்க்கிறார். ஆனால் அவரது தந்திரம் தமிழகத்தில் பலிக்காது: என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
(ஏனுங்க அரசர், மோடியோட மேஜிக் ஸ்டிக்கை ஒளிச்சு வைக்க போறீங்களாக்கும்! ஆமா உங்க கட்சி நிர்வாகிகள் நடத்துன தேர்தல் பணி நிகழ்ச்சிக்கு உங்களையே கூப்பிடலயாமே? இது என்ன மாதிரி மேஜிக்கு?)

* தூத்துக்குடி அருகே பூத் ஏஜெண்ட் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையிலேயே அ.தி.மு.க.வினர் மோதிக்கொண்டனர்: செய்தி.
(அம்மா இறந்த பெறவு கட்சி வளரலைன்னு சொன்னீகலே? பாருங்க லே, காங்கிரஸுக்கு சவால் விடுற அளவுக்கு உட்கட்சி அடிதடியில வளர்ந்திருக்கோமா இல்லையா? கூமுட்டைகளா, ஒத்துக்குங்கலே எங்க வளர்ச்சியை.

* தமிழக மக்களை கேவலப்படுத்துகிறார் மோடி. மத்திய , மாநில ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டார்கள்: என்று ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
(க்கும், கடந்த ஒரு வருஷத்துக்கு மேலே இதையேதான் நீங்களும் சொல்லிட்டிருக்கீங்க தளபதி. நிறைவேறாத ஒரே வரியை லம்ப்பா உச்சரித்த அரசியல் தலைவர்ன்னு உங்க பெயரை லிம்கா புக்குல கொண்டாந்துட போறாங்க.)

* எனக்கும், பி.ஜே.பி. தலைமைக்கும் இடையே ஒரு பிளவை உருவாக்க சதித்திட்டம் நடக்கிறது. ஆனால் அவர்களுடைய திட்டம் பலிக்காது: என்று மத்தியமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
(தல, ‘சாத்தியமில்லாத வாக்குறுதிகள்ன்னு தெரிந்தும், ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் சில வாக்குறுதிகளை அள்ளிவிட்டோம்!’ அப்படின்னு சமீபத்துல நீங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தப்பவே தலைமைக்கும் உங்களுக்கும் நடுவுல நூலறுந்து போச்சு! இன்னுமா நம்புறீங்க நீங்க?)

* புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததால் பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொன்ன கருத்து சரியானதே!: என திருமாவளவன் ஆதரவு.

(ஆமா! ஆமா! வர்ற தேர்தல்கள் முடியுற வரைக்கும் தளபதியார் என்ன சொன்னாலும் அது கரீக்கெட்டுதானுங்க! தேர்தல் முடிவை பொறுத்து அடுத்த விஷயத்தை முடிவு பண்ணணுமுங்க. )
