Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் பேச்சை அதிகாரிகளும் மதிக்கல, மக்களும் மதிக்கல.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கல் பேச்சு.

தமிழக்தில் கொரோனா தீவிரமாக உள்ளது. ஆனால் சரியான திட்டமிடலுடன் தொற்றுப் பரவலை அதிமுக கட்டுப்படுத்தியது, ஆனால் திமுக தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளை கூட செய்யவில்லை என குற்றம் சாட்டினார். 

Stalin Speech Not respected by the authorities and Not respected by the people .. Former Minister Jayakumar Criticized .
Author
Chennai, First Published Jun 5, 2021, 12:25 PM IST

திமுக ஆட்சியில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது தொற்று பரவலை கட்டுப்படுத்த அடிப்படை வேலையை கூட திமுக மேற்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 

மறைந்த கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 126வது பிறந்தநாளையொட்டி திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது : காயிதே மில்லத் தமிழ் மொழி தான் எல்லாவற்றையும் விட சிறந்தது என்று கூறியவர் ஆவார். 

Stalin Speech Not respected by the authorities and Not respected by the people .. Former Minister Jayakumar Criticized .

இஸ்லாமிய சமூகத்திற்காக கல்விப் புரட்சியை ஏற்படுத்தியவர் அவர், ஜெயலலிதா தான்  காயிதே மில்லத் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தார். தமிழக்தில் கொரோனா தீவிரமாக உள்ளது. ஆனால் சரியான திட்டமிடலுடன் தொற்றுப் பரவலை அதிமுக கட்டுப்படுத்தியது, ஆனால் திமுக தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான அடிப்படை வேலைகளை கூட செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.இப்போது கண்காணிப்பு மையங்கள் குறைவாகவே இருக்கிறது.AM, கொரொனா பரிசோதனை எடுப்பவர்களுக்கு முடிவுகள் 2 அல்லது 3 நாளுக்கு பிறகு தான் வருகிறது.

Stalin Speech Not respected by the authorities and Not respected by the people .. Former Minister Jayakumar Criticized .

திமுக ஆட்சியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இப்போதுள்ள முதல்வரின் அறிவிப்பை அதிகாரிகளும் கேட்பதில்லை, மக்களும் கேட்பதில்லை, திமுக ஆட்சியில் பிறப்பித்த ஊரங்கு ஊரடங்கு போல் இல்லை என குறிபிட்டார். 10பேருக்கு நிவாரணம் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடும் கட்சி அதிமுக அல்ல என குறிபிட்ட ஜெயகுமார் ஒபிஎஸ் - இபிஎஸ் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றார், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு எதார்த்தமானது என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios