Asianet News TamilAsianet News Tamil

நான் சர்வாதிகாரிதான் ! பொதுக்குழுவில் பொங்கிய ஸ்டாலின் ! திருந்திவிடுங்கள் இல்லன்னா…!

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளருக்கான கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கட்சி நலனுக்காக இனி நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
 

stalin speech in  general Body meeting
Author
Chennai, First Published Nov 11, 2019, 7:56 AM IST

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் களப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் சிலர் சில பிரச்சினைகளை முன்வைத்தனர். கோஷ்டி பூசல், உள்கட்சி பிரச்சினை தொடர்பான புகார்களை கூறினர்.

stalin speech in  general Body meeting

திமுக  பொதுச்செயலாளர் க.அன்பழகன் முதுமை காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். ஆனாலும் அவர் பெயரில்தான் கட்சியின் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவரை மேலும் கஷ்டப்படுத்தக் கூடாது என தி.மு.க. முடிவு செய்தது.

அதன்படி, திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு பொதுச்செயலாளருக்கான அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்காக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் இனி மு.க.ஸ்டாலினுக்கு கட்சிரீதியான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. அதேநேரம் தி.மு.க. பொதுச்செயலாளராக க.அன்பழகன் தொடர்ந்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது

stalin speech in  general Body meeting.

இதைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின் , தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் தி.மு.க. இன்றைக்கு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. 89 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருந்தோம். இப்போது 100 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருக்கிறோம் என்றார்.

stalin speech in  general Body meeting

கட்சி நலனுக்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்னேன். இங்கே கூறப்பட்ட சில உண்மையான விமர்சனங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios