மானம் மரியாதை கவுரவம் எது போனாலும் பரவாயில்லை என சென்று முதல்வரை சந்தித்து தலைவர் கலைஞக்கு மெரினாவில் இடம் வேண்டும் என முதல்வரின் கையை பிடித்து கெஞ்சி கேட்டேன். ஆனால் மறுத்து விட்டார்கள் என ஸ்டாலின் கண்ணீர் வழிய வழிய பேசினார். 

கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. கருணாநிதி இல்லாமல் முதல் முறையாக செயற்குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கவலையோடு கலந்துகொண்டுள்ளனர். 

இதில் கருணாநிதிக்கு 1 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலினை அடுத்த தலைவராக பொதுக்குழுவில் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.  அறிவாலயமே தொண்டர்களால்  நிரம்பி இருந்தாலும் அவர்கள் மனதில் ஒரு குறை வெளிப்படுகிறது. அதாவது இந்த கூட்டம் கருணாநிதி இல்லாத முதல் செயற்குழு கூட்டத்தால்  நிர்வாகிகளும் தொண்டர்களின் முகத்திலும் கவலையே தென்பட்டது.  செயற்குழுவில் பேசுபவர்கள் எல்லாம் கலைஞரை பற்றி பெருமையை விஷயங்களை  அழுதுகொண்டே பேசுகிறார்கள்.

 கடைசியாக உரையாற்றிய ஸ்டாலின் பேசியதாவது, கருணாநிதி இல்லாமல் செயற்குழு கூட்டம் நடப்பதை நினைத்து பார்க்க முடியவில்லை, நீங்கலெல்லாம் தலைவரை மட்டும் இழந்தீர்கள், நான் தந்தையையும் இழந்துள்ளேன் என கண்ணீரோடு பேசினார். மேலும் பேசிய அவர், தலைவர் மோசமான நிலையில் இருக்கும் நேரத்தில்,  தலைவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தேன்.

அப்போது இது அப்பாவின் கனவு அண்ணாவின் அருகிலேயே அவரது உடலை அடக்கம் செய்யவேண்டும். அதனால் தலைவரை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என  முதல்வரின் சம்மதிக்கவில்லை, முதல்வரின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சினேன் ஆனால் பார்க்கலாம் என சொல்லி அனுப்பிவிட்டார்.  தலைவர் மறைந்த செய்தி மாலையில் டாக்டர்களால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முறைப்படி கடிதம் எழுதி இடம் கேட்டோம், அதையும் அரசு மறுத்துவிட்டது. அப்போது தான் வழக்கறிஞர் அணி போராடி வென்றது என கண்ணீர் வழிய வழிய பேசினார் ஸ்டாலின்.