stalin speech about perarivalan parole
பேரறிவாளன் பரோலை எடப்பாடி அரசு நிராகரித்ததை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க ஜெயலலிதாவே முடிவு செய்தது ஒரு காலம். ஆனால் இன்று அவருடைய அரசு என்று கூறி கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் அவரது பரோலை நிராகரித்துள்ளனர் என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசியதாவது,
பேரறிவாளனை விடுதலை செய்ய இதற்கு முன் அரசே தீர்மானம் நிறைவேற்றியது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு மாநில அரசே பரோல் வழங்கி உள்ளது.
அதேபோல் பேரறிவாளனுக்கும் மாநில அரசே பரோல் வழங்க வேண்டும் இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
