stalin son in law asking about election expenses
ஆர்.கே.நகரில் செலவு செய்வதற்காக திமுக மாவட்ட செயலாளரிடம் இருந்து ஏற்கனவே பணம் வசூலிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
அந்த நேரத்தில், ஸ்டாலின் மருமகன் சபரீசன், ஒரு டீமை ஆர்.கே.நகருக்கு அனுப்பி சர்வே எடுத்திருந்தார். அந்த சர்வேயின்படி, திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு இருந்துள்ளது.
அதனால், வாக்காளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று மருமகன் சபரீசன், மாமனார் ஸ்டாலினிடம் கூறி இருக்கிறார்.

எப்போதும், மருமகன் சொல்லை தட்டாத ஸ்டாலின், இந்த முறை அவர் சொல்வதை கேட்கவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுக்காமல் விட்டதால்தான், ஆட்சியை இழந்தோம். அதனால் பணம் கொடுத்தே தீரவேண்டும் என்று கூறிவிட்டார்.
அவர் சொன்னது போலவே, வாக்காளருக்கு தலா 2 ஆயிரம் வீதம் 50 சதவிகித வாக்காளர்களுக்கு மேல் திமுக சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் நிறுத்தப்பட்டதால், அந்த பணம் எல்லாம் வீணாக போய்விட்டதே, மறுமுறை தேர்தல் அறிவிக்கும்போது, மீண்டும் பணம் கொடுக்க வேண்டி வருமே? என்று மாமனாரிடம் வருத்தப்பட்டாராம் சபரீசன்.

நம்மை விட அதிகமாக கொடுத்தவர்களும் இருக்கிறார்களே, அடுத்து தேர்தல் அறிவித்தால், அவர்களும் மீண்டும் கொடுக்க வேண்டி இருக்கும் அல்லவா?
அதனால், அவர்களை விட நமக்கு நஷ்டம் குறைவுதான்? என்று மருமகனை தேற்றி இருக்கிறார் ஸ்டாலின்.
