மனைவியை கோயில்களுக்கு அனுப்பி விட்டு வீரமணியை கடவுள் மறுப்புக் கொள்கையை பேச வைப்பதாக அதிமுகவின் நாளேடான நமது அம்மா கட்டுரை வெளியிட்டுள்ளது.

 

இங்கே வழிகிற ரத்தம்... அங்கே வட்டமா வட்டப்பொட்டு என்கிற தலைமைப்பில் வெளியாகியுள்ள அந்த கட்டுரையில், ‘’திமுக கருப்பு சிவப்பை கொண்ட இரட்டை நிற கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது முன்னெடுக்கிற எல்லா கொள்கைகளிலும் இப்போது இரட்டை நிலை கட்சியாக மாறி போனது தான் பரிதாபம். 

இந்தி ஒழிக என்று ஊருக்கு உத்தரவிட்டுக் கொண்டே என் பேரன் தயாநிதி இந்தி சிறப்பாக பேசுவான். அதனால் வலுவான துறை கொடுங்கள் என்று ஒருபுறம் வாய்தா போடுவதும் திமுக அதுபோலவே வழிகிற ரத்தமா என்று தன் கட்சிக்காரர் வைத்திருக்கும் குங்கும பொட்டை பொது இடத்தில் வைத்து அழிக்கச் சொல்லி அவமானப்படுத்துகிற அதே நேரத்தில் தங்கள் வீட்டு பெண்களுக்கு நெற்றியில் நிலவு சைசில் பொட்டு வைக்கச் சொல்லி புளங்காகிதம் கொள்வது அவர்களே. 

இப்படி பகுத்தறிவு இனமானம், சுயமரியாதை அத்தனையிலும் இரட்டை வேடம் போடும் இயக்கமே திமுக. கடவுள் மறுப்புக் கொள்கையை வீரமணியை வைத்து பேச விட்டு கைதட்டுவது, கூடவே துர்கா ஸ்டாலின் தொடங்கி மறைந்த வசந்தி ஸ்டான்லி வரை காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் தொடங்கி திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் வரை பினாமி பக்தர்களை அனுப்பி திருட்டுத் தனமாக வழிபாடு நடத்துவதும் திமுகவே. 

சரி அதை விடுங்க... பகுத்தறிவு இப்படி நிலைமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்த மாற்றம் தற்போதைய திமுகவின் தலைவர் துண்டுச் சீட்டிடமோ பிரதேசத்திற்கு ஒரு நிலை என்பதாக மாறியிருப்பதுதான் அடுத்த காமெடி. ஆம்.. தேர்தல் பிரச்சாரங்களில் ஸ்டாலின் கட்சிக்காரர்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டார்கள். உடனே ஆவேசப்பட்ட ஸ்டாலின், அவர்கள் முன்னிலையிலேயே ஆவேசமாக பொட்டை அழைத்து விட்டார். இந்த நிகழ்வுகள் திருவரங்கத்து கோயில் வாசல் வரை நீடித்தது.

 

ஆனால் நேற்று முன்தினம் ஆந்திராவில் நடந்த ஜெகன் மோகன் ரெட்டி பதவி பிரமாணத்துக்கு போனவர் சிவகடாசமாக மாறி முழு நிகழ்ச்சியிலும் நெற்றியிலேயே ஒத்த ரூபாய் அளவுக்கு பொட்டு வைத்த வண்ணம்தான் உட்கார்ந்து இருந்தார். உரையாற்றினார். உலா வந்தார். இதென்னடா ஆச்சரியம். தமிழ்நாட்டில் என்றால் அது வழிகிற ரத்தமா? ஆந்திராவில் மட்டும் அது அழகிய பொட்டாகுமா?

சரிசரி இன்னும் என்னென்ன பித்தலாட்டங்கள் காத்திருக்கோ. அது சரி தேர்தலுக்கு முன்பு வரை சந்திரபாபு நாயுடுவை கூட்டி வந்து கூட்டங்கள் நடத்தியவர் தேர்தல் முடிவில் அந்த சந்திரபாபு நாயுடுவையே வீழ்த்திய ஜெகன்மோகன் ரெட்டியின் பக்கமாக ஆலவட்டம் வீசுறாருன்னா நம்ம துண்டு சீட்டு ஒரு சந்தர்ப்ப நாயகர் அன்றோ..’’’ என கடுமையாக விமர்சித்துள்ளது.