இப்படி மட்டும் நடந்திருந்தால் என்னை உயிரோடவே பார்த்திருக்க  முடியாது..! 

சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் தன்னுடைய உணர்ச்சி மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
 
அதில், எப்பொழுது சூலூர் பகுதிக்கு வந்தாலும்,"மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பொன்முடி தான் நினைவுக்கு வருகிறார். சிறுவாணி தண்ணீர் கிடைக்க முக்கிய பங்காற்றியவர் பொன்முடி என புகழாரம் சூட்டினார். இருந்தபோதிலும் முழுமையான தண்ணீர் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால்,பொங்கலூர் பழனிச்சாமி தேர்வு செய்யுங்கள்.

மோடி ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை என அனைத்தும் அதிக விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் கண்டிப்பாக குறைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது ஒவ்வொரு வீட்டிலும் மாத கேபிள் கட்டணமாக ரூபாய் 300 வசூலிக்கப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 100 ரூபாயாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மோடியை வீட்டிற்கு அனுப்ப நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு எதிராக வாக்களித்தது போல சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடியை வீட்டிற்கு அனுப்ப அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் எடப்பாடி ஆட்சியை பற்றி விமர்சித்த ஸ்டாலின், தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி..கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம்  கொடுக்க மறுத்த ஆட்சியாளர்கள் பற்றி நமக்கு நன்கு தெரியும்.

பின்னர் நீதிமன்றம் சென்று போராடி கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அண்ணாவின் அருகில் அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் ஆசையாக இருந்தது. அவருடைய இந்த ஆசையை நிறைவேற்றாமல் இருந்திருந்தால், நான் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என மிகவும் உருக்கமாக பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.