அஸ்வினியின் புகார் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், படுகொலையை தடுத்திருக்க முடியும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும்  தமிழக காவல்துறைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காவலர்கள் மத்தியில் பெருகிவரும் தற்கொலைகளை தடுக்க, குறைதீர்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்தடுத்து சில நாட்களாக குற்றச்சம்பவங்களும் தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

ஆனால் ஆளுங்கட்சியினர் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என மார்தட்டி வருகின்றனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறி கார் ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து சில தினங்களில் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் உழியரை தாக்கி சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். 

இதைதொடர்ந்து மகளிர் தினத்திற்கு முந்தைய நாளில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினரை போலீசார் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனிடையே போலீஸ்காரர் ஒருவர் மன உலைச்சலுக்கு ஆளானதாக கூறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து நேற்று கல்லூரி மாணவி ஒருவர் திடீரென இளைஞர் ஒருவரால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. 

இந்நிலையில், அஸ்வினியின் புகார் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், படுகொலையை தடுத்திருக்க முடியும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முன்பு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும்  தமிழக காவல்துறைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

காவலர்கள் மத்தியில் பெருகிவரும் தற்கொலைகளை தடுக்க, குறைதீர்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்.