Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலின் ரஜினி மாதிரி நடந்துக்குறாரு.. நாங்க படகுல போனா தப்பா.? அண்ணாமலை அதிரிபுதிரி விளக்கம்.!

"முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் உள்ள தண்ணீர் இடுப்பளவுக்கு இருந்தது. நாங்கள் கொளத்தூரில் படகை எடுத்துச் சென்ற பிறகுதான் அந்தத் தொகுதிக்கு தேவையானவை செய்து கொடுக்கப்பட்டன.” 

Stalin rides a bicycle .. He walks like Rajini .. Shall we go by boat? Annamalai Athiripudiri Description!
Author
Chennai, First Published Nov 12, 2021, 8:42 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் செல்கிறார், கால்மேல் கால் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் பாணியில் செயல்படுகிறார். நாங்கள் படகில் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்சினையை தீர்ப்பதில்  தவறு எதுவும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.Stalin rides a bicycle .. He walks like Rajini .. Shall we go by boat? Annamalai Athiripudiri Description!

சென்னையில் கடந்த 6-ஆம் தேதி பெய்த கடும் மழையால், சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. சென்னையின் புறநகர்ப் பகுதிகள மட்டுமின்றி, பாதுகாப்பான பகுதிகளாகக் கருதப்பட்ட தி.நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், கே.கே. நகர் என பல பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இதேபோல வடசென்னை பகுதியில் கொளத்தூர், அம்பத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரை பார்வையிட பாஜக தலைவர் அண்ணாமலை சென்றார். முழங்கால் தண்ணீர் அளவில் படகில் அமர்ந்து அவர், வெள்ள ஷூட் நடத்தியதாக சமூக ஊடங்களில் கேலி பேசப்பட்டது. 

இந்நிலையில் கொளத்தூருக்கு படகில் சென்றது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சென்னையில் தமிழக பாஜக சார்பில் வெள்ளம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் 2 தினங்களுக்குத் தொடரும். தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. வெள்ள, நிவாரண விஷயத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு கண்டிப்பாக உதவி செய்யும்.Stalin rides a bicycle .. He walks like Rajini .. Shall we go by boat? Annamalai Athiripudiri Description!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் செல்கிறார், கால்மேல் கால் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் பாணியில் செயல்படுகிறார். நாங்கள் படகில் சென்று மக்கள் வெள்ளத்தில் படும் பிரச்சினையை தீர்ப்பதில்  தவறு எதுவும் கிடையாது. முதல்வரின் கொளத்தூர் தொகுதியில் உள்ள தண்ணீர் இடுப்பளவுக்கு இருந்தது. நாங்கள் கொளத்தூரில் படகை எடுத்துச் சென்ற பிறகுதான் அந்தத் தொகுதிக்கு தேவையானவை செய்து கொடுக்கப்பட்டன.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios