அது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா...? உச்சக்கட்ட கோபம் அடைந்த ஸ்டாலின்...!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 8, Nov 2018, 6:38 PM IST
stalin raised question against modi
Highlights

பெரம்பலூரில் நடைப்பெற்று வரும் மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மாநில அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
 

பெரம்பலூரில் நடைப்பெற்று வரும் மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மாநில அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அப்போது, "பாசிச பாஜக மற்றும் ஊழல் அதிமுக அரசுகளை வீழ்த்த இதோ பெரம்பலூரில் ஜனநாயக போர் என தொடங்கிய ஸ்டாலின், அரசியல் சட்ட அமைப்பே தெரியாதவர் மோடி என்று குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கிரிமினல் கேபினெட் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டு பேசினார்.மேலும், இந்த ஆட்சியர்கள்  மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆளும் அதிமுக அரசை சாடினார்.

ஒரே ஒரு போர்

பாசிச பாஜக ஆட்சிக்கும், ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சிக்கும் எதிரான போர். அந்த போருக்கு  பெரம்பலூர் ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதார் அட்டை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது உங்கள் ஆட்சியில் அதே ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தி உள்ளீர்கள்...

எதற்கெடுத்தாலும் வெளிநாடு சென்று வரும் மோடி...யார் பணத்தில் சென்று வருகிறார்... அவை அனைத்தும்  மக்கள் வரிப்பணம்....அது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? என கடுமையாக சாடினார் ஸ்டாலின்.

மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்கான முன்னோட்டம் தான் இது என்றும், ஒரே நாளில் ஜிஎஸ்டி- யை இரவோடு இரவாக கொண்டு வந்தீர்களே....இதற்கு பின் நடக்கும் ஊழல் என்னவென்று தெரியும்.எதையும் ஆதாரத்தோடு தான் நான் பேசுவேன்..ஏனென்றால் நான் கலைஞரோட பையன் ஆச்சே என வீறு கொண்ட சிங்கமாய் மாறினார் திமுக தலைவர் ஸ்டாலின்.  
 

loader