எல்லாம் சரியாகி விடும். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டு கொண்டார். ஆனால் இன்று 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இனிமேலும் சீராக வாய்ப்பு இல்லை என்றும், இந்திய பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, நாட்டு வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கும் அபாயக் கோட்டில் நிற்கிறது என்றும், பிரபல பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது மிக மிக துரதிருஷ்ட வசமானது. 

ஆகவே இதுவரை மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் இருந்தது போல் இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், வங்கி செயல்பாடுகளை சீர் செய்ய வேண்டும். 

வங்கிகளுக்கு தேவையான புதிய ரூபாய் நோட்டுக்களை உடனடியாக வழங்கி பணம் எடுப்பது, திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி சகஜமான வங்கி செயல்பாடுகள் திரும்பவும், உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் பொருளாதாரத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது, எத்தனை கருப்பு பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறேன்.