stalin pays homage to ex mla natarajan
திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் மறைவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் காலமானார். அவருக்கு வயது, 77. இவர் கடந்த 1977, 1984,1989,1996 ஆம் ஆண்டுகளில் பேரூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
தொமுச மாநில தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தொழிலாளர் நலனுக்காகவே தினசரி சிந்தித்து வாழ்ந்து வந்த ஒரு மாபெரும் தூணை இழந்து திமுக தவிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக குறிபிட்டார்.
